சீனா: சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த இடங்கள் இடிந்து விழுந்ததுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.