தெற்கு காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் :கடந்த 15 நாட்களில் 8 டாப் கமாண்டர்கள் உட்பட 23 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோபியான் மாவட்டம் சுகூபகுதியில் வில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 8 டாப் கமாண்டர்கள் உட்பட 23 தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சுகூ பகுதியில்  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ராணுவத்தினரும் காஷ்மீர் போலீசாரும் சி.ஆர்.பி.அப் வீரர்கள் இணைந்து மேற்கொண்டனர்.அப்போது ,தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். மேலும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தளபதி உட்பட ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 88 தீவிரவாதிகள் 36 என்கவுண்டர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: