மாதவரம் தற்காலிக சந்தையில் விற்பனை மந்தம்; பழங்களை வியாபாரிகள் சாலையில் கொட்டும் அவலம்...!!

சென்னை: சென்னையில் பழங்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளதால் மாதவரம் சந்தையில் பழங்களை சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த பழங்கள் மற்றும் பூக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன.

தொடக்கத்தில் கடைகளை அமைக்க தயங்கிய வியாபாரிகள், சில்லறை விற்பனைக்கு தடை செய்யப்பட்டதும் விற்பனைக்கு முன்வந்தனர். மொத்த வியாபாளி மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதன் எதிரொலியாக பழங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால், விற்பனை சரிந்ததால், ஆப்பிள், அன்னாச்சி, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் அழுகிய நிலையில் சாலையில் கொட்டப்படுகின்றன.

கூட்டத்தை கட்டுப்படுத்த பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வியாபாரிகள் கீழ் தளத்தில் மட்டும் வியாபாரம் செய்வதால் தற்காலிக சந்தையிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: