சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள 55 பேரில் தற்போது 23 சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதன் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பானது குறைந்தபாடில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த வைரஸானது ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து 55 ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
