வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் 8 வழிச்சாலை வந்தால் தான், அதன் அருமை தெரியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி: வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை வந்தால் தான், அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி புதிய கட்டிடத்தினையும் திறந்து வைத்தார். இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 4 வழிச்சாலை வந்த பிறகும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளதாக தெரிவித்தார். 6 வழிச்சாலை, விரைவுச்சாலை என வடமாநிலங்கள் சிறப்பான சாலை வசதிகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழகத்தில் 8 வழிச்சாலை வந்தால் தான் போக்குவரத்து நேரம் குறைந்து வணிகம் உள்ளிட்டவை மேம்படும் என்று முதல்வர் தொடர்ந்து வளியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றத்தில் 8 வழிச்சாலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், சினிமாவிற்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வது மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம், சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீதம் என்று இருந்த ஜி.எஸ்.டி வரியை தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சி காரணமாக 100 ரூபாய் வரை கட்டணம் வரை 18 சதவீதமும், அதற்கு மேல் வசூலிக்கப்படுவதற்கு 28 சதவீதம் 2 விதமாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. 30 சதவீதமாக இருந்த திரையரங்கு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய அரசின் பொருளதார நிலை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா எல்லாம் முடிந்து சகஜநிலைக்கு வந்த பிறகு கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார், என கூறியுள்ளார்.

Related Stories: