ஆபாச படமெடுத்து பெண்ணிடம் 2 லட்சம் கேட்ட அதிமுக செயலர் கைது

உத்தமபாளையம்:  தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தேவாரம் டிகேவி பள்ளி தெருவை சேர்ந்தவர் ராஜீவ் (35). பேரூராட்சி 6வது வார்டு அதிமுக செயலாளர். மனைவி பிரியதர்ஷினி. அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ராஜீவ் நட்பாக பழகியுள்ளார். தனது செல்போனில் அவரை ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்த ராஜீவ், அவரது மனைவி ஆகியோர், அந்த ஆபாச படங்களை காட்டி, ரூ.2 லட்சம் தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தேவாரம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து ராஜீவை கைது செய்தனர். தலைமறைவான பிரியதர்ஷிணியை தேடி வருகின்றனர். 

Related Stories: