வெப்ப சலனம் நீடிப்பு: தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அரபிக் கடலில் மையம் கொண்டு இருந்த நிசர்கா புயல் நேற்று மதியம் மும்ைப அருகே கரையைக் கடந்ததால் கடல் மற்றும் தரைக்காற்றின் ஈரப்பதம் முற்றிலும் உறிஞ்சப்பட்டது. இதனால் தமிழகத்தில் நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்பட்டது. ெவயிலை பொறுத்தவரையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதனால், தமிழகத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு  சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக தேவாலாவில் 90 மிமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி 80 மிமீ, பெருஞ்சாணி, அணைக்கட்டு 60 மிமீ, பேச்சிப்பாறை சிவலோகம், நாவலூர்50 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வெப்ப சலனம் நீடித்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

Related Stories: