அரசின் முடிவில் தலையிட முடியாது; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை

மதுரை: 10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்துள்ளது. 10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் குறைவாக மாவட்டஙகளில்தான் அதிக பாதிப்பு உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், தேர்வை தள்ளிப்போடுவது மாணவர்களின் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா அதிகமாக இருப்பதை அறிந்தே அரசு முடிவு எடுத்திருக்கும். அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்வதை தமிழகத்துடன் ஒப்பிடக்ககூடாது. 10-ம் வகுப்பு தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயார் நிலையில் இருக்கிறார்களா? மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், த்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். சூழ்நிலை மற்றும் பெற்றோர்கள் மனநிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

 பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றார். மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆலோசகர்கள் கருத்தை கேட்டு முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார். பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: