குட்கா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா ேபான்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.  இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் கீழ் குட்கா பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்பதற்கான தடை உத்தரவை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மே 23ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: