சோலார் விளக்குகள் பழுதடைந்ததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள்

வருசநாடு: சோலார் விளக்குகள் பழுதடைந்ததால், வருசநாடு அருகே மலைக்கிராமங்கள் இரவு நேரங்களில் இருளில் மூழ்குகின்றன. இதனால் மக்கள் அவதியடைகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் நொச்சிஒடை, வெள்ளிமலை, குழிக்காடு, மேலபொம்மராஜபுரம், வடக்குஅரசரடி, பொம்மக்கடவு ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள தெருக்களில் மேகமலை ஊராட்சி சார்பில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கும் சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த சோலார் விளக்குகள் ஒட்டுமொத்தமாக பழுதடைந்துள்ளன.

இதனால் சில மாதங்களாக, இந்த கிராமங்கள் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கின்றன. பழுதடைந்த சோலார் விளக்குகளை அகற்றிவிட்டு, புதிய விளக்குகளை பொருத்த ஊராட்சி நிர்வாகித்திடம் இப்பகுதிமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கிராமமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிராமமக்கள் நலன் கருதி பழுதடைந்த சோலார் விளக்குகளை அகற்றி விட்டு, புதிய விளக்குகள் பொருத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: