அரசின் ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளர்வை ஏற்படுத்தக்கூடாது: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுரை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு தளர்வை ஏற்படுத்தக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிகேட்டுக் கொண்டுள்ளார்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இ

ந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்றன. நமக்கு சென்னை ஒரு சவாலாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுவரை 2,47,561 வெளிமாநில தொழிலாளர்கள் 170 ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் ஆய்வக பரிசோதனை மையங்கள் 70 உள்ளது.

இந்த மையங்கள் மூலம் தினசரி 12 ஆயிரம் பேருக்கு குறையாமல் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4,55,216 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் 19,372 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் 89,082 உள்ளனர். சிகிச்சைக்கு பின் 10,548 பேர் வீடு திரும்பி உள்ளனர். இது 54.45 சதவீதம் ஆகும். 145 பேர் உயிரிழந்துள்ளனர். இது 0.75 சதவீதம் ஆகும்.  தமிழகத்தில் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு விட்டதாலும், கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாலும் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கி பணி செய்ய மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கலாம். சென்னை தவிர்த்து மற்ற மாநிலங்களில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளர்வை ஏற்படுத்திவிட கூடாது. நீங்கள் எந்தவொரு தளர்வு ஏற்படுத்த வேண்டுமென்றாலும் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு அவருடைய அனுமதி பெற்றுத்தான் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்றன. நமக்கு சென்னை ஒரு சவாலாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Related Stories: