குமாரி மாவட்ட மீனவர்கள் 720 பேர் ஈரானில் சிக்கித் தவிப்பு.: குமாரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர் அமைப்புகள் மனு

குமாரி : கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டி எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 720 மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய பதில் அளிக்காததால் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதாக இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த மீனவ அமைப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஈரான் நாட்டில் சிக்கியுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் தமிழக மீனவர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக மீனவ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: