பெண் உதவி கமிஷனர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா: காவல்துறையில் பாதிப்பு 290 ஆக உயர்வு

சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குற்றத்தடுப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் உட்பட 12 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதையடுத்து மாநகர காவல் துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குற்றத்தடுப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் மற்றும் யானைகவுனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட மாநகர காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்ட பெண் உதவி கமிஷனர் உட்பட 12 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல் துறை நேற்று வரை கூடுதல் கமிஷனர் உட்பட மொத்தம் 290 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மருதம் விடுதில் சிகிச்சை பெற்று வந்த 73 பேரில் 71 பேர் குணமடைந்து நேற்று வீட்டிற்கு திரும்பி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: