அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை கைதி தற்கொலை

புழல்: அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி உள்பட  புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவைச் சேர்ந்த வெல்டிங்  பழனி  (41)  என 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில்   ஒரு சிலருக்கு 7 ஆண்டு  மற்றும் ஒரு சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில், சிறையில் இருந்த வெல்டிங் பழனிக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சிறையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் அவர் தங்கியிருந்த சிறைக்கு கழிவறைக்கு பின்புறம் உள்ள ஜன்னலில் பெட்ஷீட்டை எடுத்து கயிறுபோல் திரித்து தூக்கு மாட்டிக்கொண்டார்.

இதைப்பார்த்த சக கைதிகள் சிறைத்துறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே சிறைத்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஏற்கனவே இதே வழக்கில் உடல் நலம் சரியில்லாததால் கைதி ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: