சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்

இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்துவதற்கான வரிச்சலுகையை பிசிசிஐ  மத்திய அரசிடம் பெறாததால், இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்காக வரிச் சலுகை பெற பிசிசிஐ-க்கு மே 18 வரை ஐசிசி காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இதுவரை பிசிசிஐ வரிச்சலுகை பெறவில்லை. இதனால் ஐசிசி சுமார் ₹756 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஐசிசி விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வரிச்சலுகை உள்ளிட்ட விதிகளை செயல்படுத்தாவிட்டால் போட்டி நடத்தும் உரிமையை ரத்து செய்வதுடன் வேறு நாட்டுக்கு அதை கைமாற்றலாம். எனவே சாம்பியன்ஸ் டிராபி டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில், பிசிசிஐ வரிச்சலுகை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: