சிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்

சென்னை: இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் சிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், சிங்கம்பட்டி ஜமீன் பல இலட்சம் மக்கள் கூடும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலின் பரம்பரை அறக்காவலர் சாதி மத இன வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்தும் அன்புடன் பழகி வந்தார். அன்னாரின் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தம் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
Advertising
Advertising

Related Stories: