திருவேற்காடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர்கள் உட்பட 4 பேர் திடீர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த 4 இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் நடராஜன் சேலம் மண்டல இணை ஆணையராகவும், சென்னை தலைமையிட இணை ஆணையர் லட்சுமணன் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும், சேலம் மண்டல இணை ஆணையராக இருந்த கவிதா பிரியதர்ஷினி சென்னை தலைமையிட இணை ஆணையராகவும், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், லட்சுமணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை தலைமையிட இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு பதில் அளிப்பது, ஊழியர்கள் ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பாக அனைத்து பணிகளும் தலைமையிட இணை ஆணையரின் மிக முக்கிய பணியாக உள்ளது. அவர், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சேலம் மண்டல இணை ஆணையராக இருந்த கவிதா பிரியதர்ஷினி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் அங்கு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் பணியமர்த்தப்பட்டுள்ளார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு இணை ஆணையராக செல்லத்துரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் பணியமர்த்தப்பட்டிருந்தார். அவர் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: