மத்திய அரசு, வங்கி அதிகாரிகள் மீது ஓய்வு பெறும் முன்பே ஊழல் நடவடிக்கை: கண்காணிப்பு ஆணையம் புது உத்தரவு

புதுடெல்லி:ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் மத்திய அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மீதான வழக்குகள், அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் முடிக்கப்படாமல்  இழுத்தடிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த 2007ம் ஆண்டு முதல் கடந்தாண்டு ஜூலை மாதம் வரை மத்திய‍ ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால், இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால், அனைத்து வங்கிகளின் தலைவர்கள், செயல் இயக்குனர்கள் மற்றும் மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுக்கும் ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையம் புதிய சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், ஓய்வு பெறும் வங்கி அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு விவரங்களை, அவர்கள் ஓய்வு பெற உள்ள மாத‍த்தின் முதல் வாரத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையத்தின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் இவை கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். 10ம் தேதி விடுமுறை நாளாக இருக்கும்பட்சத்தில் அடுத்த வேலை நாளில் மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். ஊழலில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீதான விசாரணையை ஓய்வு பெறுவதற்கு முன்பு தொடங்கினால் மட்டுமே, அவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து முடிக்க முடியும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: