சுனில் செட்ரி மீது இனவெறி தாக்குதல்: ரசிகர்கள் கண்டனம்

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரி,  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி  இருவரும் சமீபத்தில் சமூக ஊடகமொன்றில் கருத்து பரிமாறிக்கொண்டனர். கால்பந்து, கிரிக்கெட், சமூகம், இளமை பருவத்தை கழித்த டெல்லி என பல்வேறு தளங்களில் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அப்போது ஆசாமி ஒருவர், ‘யார் இந்த நோபாளி?’ என்று இந்தியில் பதிவிட்டார். தனது தோற்றத்தை வைத்துதான் இப்படி அந்த ஆசாமி கிண்டல் செய்கிறார் என்று உணர்ந்தாலும் சுனில் அதை கண்டுக் கொள்ளாமல் கோஹ்லியுடன் உரையாடலை தொடர்ந்தார். ஆனால்  சுனிலின் ரசிகர்கள்  கொந்தளித்துவிட்டனர். அந்த அற்ப ஆசாமிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

ரசிகர் ஒருவர், ‘இந்தியாவில் வடகிழக்கு மாநில மக்கள் குறித்து பலர் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதை இந்த கேள்வி உணர்த்துகிறது’என்று கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர், ‘இந்திய கேப்டனை ஒருவர் நோபாளி என்று கிண்டல் செய்வது வெட்கக் கேடானது. வடகிழக்கு மாநில மக்களை இங்குள்ளவர்கள் நோபாளி என்றும், சிங்கி என்றும்  அழைப்பது அருவறுப்பானது’ என்று அதிரடித்துள்ளார். இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தன்னை சிங்கி என்று பலர் இனப்பாகுபாட்டுடன் கிண்டல் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். ஜுவாலாவின் தந்தை தெலுங்கு, தாய் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக கோல் அடித்தவர்

நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட சுனில் செட்ரி (36) செகந்திராபாத்தில் பிறந்தவர் (தெலங்கானா). இதுவரை இந்திய அணிக்காக  115 சர்வதேச போட்டிகளில் விளையாடி 72 கோல் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த, அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய  இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். உலக அளவில் தாய் நாட்டுக்காக அதிக கோல் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் சுனில் 10வது இடத்தில் இருக்கிறார்.

ராணுவ வீரரான சுனிலின் தந்தை கார்கா செட்ரியும் கால்பந்து வீரர்தான். அவர் இந்திய ராணுவ கால்பந்து அணிக்காக விளையாடி உள்ளார். அவரது தாய் சுசிலா செட்ரியும், அவரது இரட்டைச் சகோதரிகளும் கால்பந்து வீராங்கனைகள் என்பதுடன் நேபாள தேசிய மகளிர் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: