ஒரு கண்ணை ஏன் பறித்தாய் இறைவா? செல்வராகவன் உருக்கம்

இயக்குனர் செல்வராகவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. இது பற்றி நினைத்து தனது 14 வயதில் மிகவும் வருந்தியதாக அவர் கூறுகிறார். 14 வயதில் உள்ள தனக்கு இப்போது தானே ஒரு கடிதம் அவர் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பது: உன்னுடைய தோற்றத்தை பார்த்து, உன்னுடைய ஊனத்தை பார்த்து, ஒரு கண் இல்லாததை பார்தது இந்த உலகம் சிரிக்கலாம். நீ எந்த இடத்திற்கு போனாலும் உன்னை மக்கள் வித்யாசமாக பார்க்கலாம் அல்லது கேலி செய்யலாம். ஒவ்வொரு இரவும் அதை நினைத்து கண்ணீர் விடுவாய். சில சமயங்களில் கடவுளை பார்த்து கேட்பாய், ‘ஏன் என்னுடைய கண்ணை எடுத்துவிட்டாய்?’ என்று. ஆனால் வருத்தப்படாதே செல்வா. இன்னும் 10 வருடங்களில் நீ ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை எழுதி இயக்க போகிறாய். அது உன்னுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும்.

 இதே உலகம் உன்னை பார்த்துக்கொண்டு தான் இருக்கும். ஆனால் உன்னை கேலி செய்வதற்காக இல்லை, அதிக மரியாதை மற்றும் போற்றுதல் உடன் அந்த பார்வை இருக்கும். அதற்கடுத்த பத்து வருடங்களில் நீ உருவாக்கும் படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் ட்ரெண்ட் செட்டிங், கல்ட் கிளாசிக் படங்களாக இருக்கும். மக்கள் உன்னை ஜீனியஸ் என அழைப்பார்கள். கடவுள் உன்னிடம் இருந்து எதாவது ஒரு பொக்கிஷமான ஒன்றை எடுத்துக்கொண்டார் என்றால், அதை விட பல மடங்கு உனக்கு திருப்பி கொடுப்பார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: