ஊரடங்கின் போது பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்; மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை; சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளார். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட   மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

4-ம் கட்ட ஊரடங்கிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஊரடங்கில் வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,92,981 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.  ஊரடங்கில் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.  ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவும் பிறப்பித்து உள்ளது.

Related Stories: