உத்தரபிரதேசத்தை சேர்ந்த 515 தொழிலாளர்கள் ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சை: தஞ்சையில் இருந்து தனி ரயிலில் உத்தரபிரதேசத்துக்கு 515 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை தனி ரயில்களில் அனுப்பி வைக்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகளில் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் ரயில் நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை, மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் தஞ்சையை சேர்ந்த 217 பேர், நாகையை சேர்ந்த 191 பேர், திருவாரூரை சேர்ந்த 107 என மொத்தம் 515 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு தனி ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் இன்று பீகார் செல்லும் தொழிலாளர்கள் 1,457 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Related Stories: