காஞ்சிபுரம்: கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயமணி கால்நடை மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சுமார் 2 மாதங்களாக பொதுமக்களும், கால்நடைகளும் பயன்பெறும் வகையில் கால்நடை நிலையங்களை திறந்து வைத்து சேவை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முழுமையாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் முகக் கவசங்களும், 3 ஆயிரம் கிருமி நாசினிகளும் வழங்கப்பட்டன.
