அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது: மத்திய அரசு

டெல்லி:  நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம். ஊரடங்கில் தளர்வுகளை அனுமதிக்கும் போது, கொரோனா தடுப்புக்கான பொது வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: