வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் பரவுகிறது கொரோனா: மக்கள் அச்சம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் 3ம் கட்டமாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில்தான்  கடந்த ஜனவரியில் காரோனா  கண்டறியப்பட்டது. பின்னர் வேகமாக பரவியது. அந்த எண்ணிக்கை 560 வரை சென்றது. பின்னர், அரசு எடுத்த முயற்சிகளால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 6ம் தேதிதான் மிக அதிகமாக 266 நோயாளிகள் சிகிச்சையில்  இருந்தனர். ஆனால், மே 1ம் தேதி காரோனா நோயாளிகளே இல்ைல என்ற நிலை  ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம்  முதல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கேரளா வர  தொடங்கினர். இவர்கள் மூலம் 3ம் கட்டமாக நோய் பரவும் அபாயம் தொடங்கி இருக்கிறது. பூஜ்ஜியம் மற்றும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த  தொற்று 2 நாட்களுக்கு முன் 10 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் இது 26 ஆக  அதிகரித்தது. கடந்த 40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் தான் கேரளாவில் மிக  அதிகமாக 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் 3ம் கட்டமாக கொரோனா பரவல் அதிகமாகும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: