தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்வு

* சென்னையில் பாதிப்பு 363, இறப்பு 2

* அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் நேற்று 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று 11,965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் சென்னையில் 363 பேருக்கும், செங்கல்பட்டு 9, திண்டுக்கல், கரூர்,  ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 1 நபருக்கும், காஞ்சிபுரம் 8, கன்னியாகுமரி 5, மதுரை 2, பெரம்பலூர் 4, திருவள்ளூர் 15, திருவண்ணாமலை 8, நெல்லை 3 என 423 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. தற்போது டெஸ்டிங் லேப் 58 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 68 குணமடைந்து வீடு திரும்பியதால் அதன் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 43 வயது அவருக்கு ஏற்கனவே டயாலிசிஸ் செய்து வந்தவர். அதனுடன் மஞ்சள் காமாலை, ரத்த கொதிப்பு என பல்வேறு நோய்கள் காரணமாக இறந்துள்ளார். அதைப்போன்று 45 வயதுடைய நபர் அவருக்கும் ரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்சனை இருந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியாவில் மொத்தம் சோதனை செய்யப்பட்டது 19 லட்சம் ஆகும். தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 3 லட்சத்ைத தொட்டிருக்கும். பல்வேறு மாநிலங்களில் நோய் பாதிப்பு இருந்தாலும் மிகக்குறைவான இறப்பு விகிதம் தமிழகத்தில் உள்ளது. மேலும் மருத்துவ வல்லுநர் குழு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். விமானத்திதல் வந்தவர்களை சோதனை செய்ததில் ஒரு விமானத்தில் 4 பேருக்கும், மற்றொரு விமானத்தில் 5 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். கப்பலில் வந்தவர்களுக்கு நடந்த சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. மேலும் நேற்று டெல்லியில் இருந்து ரயிலில் வருபவர்களை சோதனை செய்ய 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் பாசிட்டிவ் வந்தவர்கள் மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர். அதைப்போன்று நாளைக்கு 1100 ரயிலில் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்படும். சிவகங்கையில் 23 நாட்களுக்கு பிறகு ஒருவர் மும்பையில் இருந்து வந்ததால் அவருக்கு பாசிட்டிவ், அதைப்போன்று நெல்லைக்கு மகாரஷ்டிராவில் இருந்த வந்த 13 பேருக்கு பாசிட்டிவ் இதுபோன்ற சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.  மேலும் ெகாரோனா வைரஸ் தான் நம்முடைய எதிரி, பாசிட்டிவ் ஆனவர் எதிரி அல்ல அவரை எதிரியாக பார்க்க கூடாது.

இந்நிலையில் மருத்துவவல்லுநர் குழுக்கள் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 கேன்சர் நோயாளிகள், 2 எச்ஐபி நோயாளிகள், 15 சர்க்கரை நோய்கள் குணமாகியுள்ளனர். மேலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து, இந்திய மருத்துவத்துறையிலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 3 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டு நோய் எவ்வளவு நாட்கள் இருக்கிறது, எப்படி பரவுகிறது, எத்தனை நாட்கள் பாதிப்பு இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: