ஷ்ஷ் அப்பா... கண்ண கட்டுதே...எந்த பக்கம் போனாலும் அணை போடுறாங்களே!: ஆந்திராவின் கிடுக்கிப்பிடியால் தமிழக குடிமகன்கள் புலம்பல்

ஐதராபாத்: ஆந்திராவில் மதுபானங்களை வாங்குவதற்கு ஆதார் கட்டயாமாக்கப்பட்டு உள்ளதால், தமிழக குடிமகன்களின் பாடு திண்டாட்டமாகி  இருக்கிறது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 45 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன.  ஆனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. குடிமகன்களின் மது வெறியில் இந்த தீர்ப்பு இடியாக  இறங்கியது. பழைய குருடி கதவை திறடி என்பதுபோல், தமிழக குடிமகன்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் வெற்றிகரமாக தடையின்றி செயல்பட்டு வருகின்றன ஆந்திராவின்  எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான திருவள்ளூர், திருத்தணி ஆகிய  பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் சித்தூர் மாவட்டத்தின்  புத்தூர் தாலுகாவில் உள்ள கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆனால், ஆந்திராவில் மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார்  கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டு். இது தமிழக குடிமகன்கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மதுபான கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ``ஆதார் கொண்டு வருபவருக்கு மட்டுமே  மதுபானங்கள் விற்க  அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் அந்த கடை இருக்கும் தாலுகாவுக்கு உட்பட்டவரா என்பதை முகவரியில் பார்த்த பின்னரே மதுபானம்  வழங்கப்படுகிறது. ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து வரும் குடிமகன்களின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமையில் இருந்து  குறைந்துள்ளது,’’ என்றார்.

Related Stories: