திமுக சார்பில் முடி திருத்துவோர், சலவை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றிய திமுக சார்பில், 200 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.  கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் முரசொலிமாறன் நகர், கே.கே நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகள் 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சா.மு நாசர்,  வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர். இதில், ஆர்.மோகனசுந்தரம், தாடி நந்தகோபால்,  சி.ஆர்.குமரன், கொப்பூர் டி.திலிப்குமார், ராமதாஸ், ஞானகுமாரன், பஞ்சாட்சரம், ஆனந்தன், பிரவீன்குமார், டில்லி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: