கொரோனா பரவல் எதிரொலி: ட்விட்டர் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தினம் தினம் தீவிரமடைந்து வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் தனது அலுவலகங்களைத் திறக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டர், கடந்த மார்ச் மாதம் முதலே Work From Home நடவடிக்கையைப் பின்பற்ற ஆரம்பித்தது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை சமாளிக்க இந்தத் திட்டத்தை வெகு விரைவாக கையிலெடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர் ஒன்றாகும்.

இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது அனைத்து அலுவலக பணிகளையும் வீட்டிலிருந்தபடியே செய்யமுடியும் என்பதை கடந்த சில மாதங்களில் நிரூபித்துள்ளதால் வரும் காலங்களிலும் இதை தொடர விரும்புவதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அலுவலகங்களை திறக்கும் திட்டமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்த ஆண்டு முழுமைக்கும் வீட்டிலிருந்தபடியே தங்களின் பெரும்பான்மையான ஊழியர்கள் பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் ட்விட்டரும் ‘நிரந்தரமாக வீட்டிலிருந்தபடியே பணி என்கிற முடிவு குறித்து பேச ஆரம்பித்துள்ளது.

Related Stories: