தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால் உயிருக்கு போராடும் வங்கி பணியாளர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு பயணம்

சென்னை: தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால் உயிருக்கு போராடும் வங்கி பணியாளர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.விஜய்யாசம் என்ற அவர்,ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர்.ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நோயாளியை சென்னைக்கு ஐசிஏடிடி நிறுவனம் அழைத்து வருகிறது. தென் ஆப்ரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் பரோடா வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. உயர் சிகிச்சைக்காக வங்கி ஊழியரை சென்னைக்கு கொண்டு வர மருத்துவர்கள் முடிவு செய்தனர்.புற்றுநோய் பாதித்த வங்கி ஊழியரை சென்னைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஐசிஏடிடி நிறுவனம் ஏற்றது.

இந்திய பெருங்கடல், அரபிக்கடல் தாண்டி 7,100 கி.மீ.க்கு மேல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் செல்ல வேண்டி இருந்தது. ஜோகன்னஸ்பர்க் செல்லும் வழியில் மொரீஷியஸில் இறங்கிச் செல்ல அனுமதி பெறப்பட்டது. மே 8ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட லியர்ஜெட் ஏர் ஆம்புலன்ஸ் 9ம் தேதி ஜோகன்னஸ்பர்க் சென்றது.புற்றுநோயாளியுடன் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று சென்னை வருகிறது.பயணத்தின் போது தேவையான சிகிச்சை அளிக்க 2 மருத்துவரும் விமானத்தில் பயணம் செய்கின்றனர்.வெளியுறவு, சுகாதாரம், உள்துறைகளின் ஒத்துழைப்புடன் புற்றுநோயாளி சென்னை அழைத்து வரப்படுகிறார். ஐசிஏடிடி நிறுவனத்தின் லியர்ஜெட் ஏர் ஆம்புலன்ஸில் இன்று மாலை புற்றுநோயாளி சென்னை வருகிறார்.

Related Stories: