மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி துவக்கம்

மேட்டூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் தேவை கணிசமாக குறைந்ததால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி 1,440 மெகாவாட்டில் இருந்து 210 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது.  தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களும், பெரிய தொழிற்சாலைகளும் செயல்பட தொடங்கியது.  இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 4 அலகுகளிலும் 840 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

Related Stories: