தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாத இறுதியில் வெளியிட முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜூன் இறுதிக்கு பிறகு தேர்வு தேதி அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10-ம் பொதுத்தேர்வுகள் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்கிற சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்திருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் மிக முக்கியமானது. ஆகையால் லாக்டவுனுக்குப் பின் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என கூறியிருந்தார். தற்போது மே 17-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லாக்டவுன் முடிவடைந்த உடனேயே தேர்வுகள் நடத்தப்படுவதற்கு சாத்தியம் இல்லை. ஜூன் மாதத்தில்தான் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று மத்திய் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: