கண், காது, பல் எதுவும் அவரை போல இல்லை..போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றுகிறார் வடகொரிய அதிபர் கிம் : வெடித்த சர்ச்சைகள்

சியோல் : இருபது நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 20 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்திருந்தார். அதனால் அவர் இறந்து விட்டதாகவும் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உர தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் கிம் ஜாங் உன்.

தொழிற்சாலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடகங்கள் வெளியிட்டது. பலரும் புகைப்படங்களை வைத்து பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். இந்நிலையில் வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என உலக நாடுகளிடையே மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது.

*முன்னாள் டோரி எம்.பி லூயிஸ் மென்ஞ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பொது இருக்கும் கிம்மின் பற்களும் இதற்கு முன்னர் உள்ள கிம் புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வேறுமாதிரி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையில் வெளியிட்ட பழைய புகைப்படத்தில் இருக்கும் பற்களும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய கிம்மின் புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வித்தியாசமாக இருந்தன.

*அது மட்டுமல்லாது முன்பு இருந்ததை விட இப்போது அதிக சதை போட்ட கன்னங்களுடன் இருக்கின்றார். இதற்கு அவரது உணவு பழக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது.

*அதோடு இப்போது இருக்கும் கிம்மின் காதுக்கும் முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் கிம்மின் காதுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரின் இமை வேறு மாதிரி இருக்கிறது. கண்கள் கூட வேறு மாதிரி உள்ளது. அதோடு கன்னம் கூட வேறு மாதிரி இருக்கிறது.

*சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக செயல்படும் ஜெனிபர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 1ம் தேதி கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் என குறிப்பிட்டு தலைமுடி, பல், காது மற்றும் அவரது சகோதரி என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு ஏவுகணை சோதனைக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் கிம் போன்று தோற்றமளிக்கும் ஒரு நபர் ஒன்று போல் ஆடை அணிந்துள்ளார். முடி வெட்டும் முறை கூட கிம்முடன்  ஒத்துப் போவதாகவே அமைந்திருந்தது. இதனால் தன்னை போன்று தோற்றமளிக்கும் நபரை தனது இடத்தில் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் பலம் பெற்றுள்ளது.

 வட கொரிய அதிபர் கிம்மிற்கு உள்நாட்டிலேயே அவருக்கு பல எதிரிகள் இருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.இதன்காரணமாக கண்ணுக்கு தெரியாத எதிரிகள், துரோகிகள் மூலம் தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க தன்னைப் போன்றே தோற்றமளிக்கும் நபரை பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகமும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

Related Stories: