அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 59ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : தமிழ்க அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்க அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். அத்துடன் பதவி உயர்வு உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது பதவி உயர்வை சிலருக்கு பாதிக்கலாம். அதே சமயம் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: