ஆ... ஊன்னா... மஞ்சள், மஞ்சளா.... காரை ஓட்டி கதறவிட்ட பாட்டி

புளோரிடா: அமெரிக்காவில் காரை ஓட்டிய பாட்டி, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், பின்னால் இருந்த விலையுயர்ந்த கார்கள் நசுங்கின. அமெரிக்காவின் புளோரிடா நகரைச் சேர்ந்தவர் நான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இப்போது வீட்டில் இருக்கிறார். நேற்று முன்தினம் இவர், புளோரிடாவில் உள்ள சன் டிரஸ்ட் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்த பின்னர் அவர் தன்னுடைய காருக்கு வந்துள்ளார்.சாதாரணமாக காரை எடுக்கும்போது, அது நியூட்ரல் எனப்படும் இயக்கத்தில் இல்லாத நிலையில் இருக்கிறதா என்பதை பார்த்து அதன் பின்னர்தான் காரை எடுப்பார்கள். ஆனால், நான்சி பாட்டி, காரில் அமர்ந்தவுடன், கியரை சரிபார்க்காமல், கிளட்ச்சை அழுத்திக் கொண்டு ஸ்டார்ட் செய்துவிட்டார்.

பின்னர் கிளட்சை விடுவித்துக் கொண்டே, ஆக்சிலேட்டரை விரைந்து அழுத்தி உள்ளார். யார் மீது அவ்வளவு கோபப்பட்டார் என்று தெரியவில்லை. விரைவாக செல்வதாக நினைத்து அவர் காரில் ஆக்சிலேட்டரை அமுக்க, கார் ஏற்கனவே ரிவர்ஸ் கியரில் இருந்ததால், மின்னல் வேகத்தில் பின்னோக்கி பாய்ந்தது. இதில் ஏற்கனவே அங்கு நின்றிருந்த விலையுயர்ந்த காரின் மீது பாட்டியின் கார் ஏறி நின்றது. அதிர்ஷ்டவசமாக பின்னால் இருந்த காரில் இருந்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் இன்றி உயிர் தப்பினர். இதில் ஹைலைட், இந்த சம்பவத்துக்கு பின்னர் நான்சி பாட்டி, காரில் இருந்து கதவை திறந்து பார்த்து, ‘‘அது யாருடா... என் காருக்கு கீழே ரெண்டு காரை கொண்டு வந்து நிறுத்தினது?’’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுதான்.

Related Stories: