வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முடிவு; பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது குறித்து வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவு கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய இந்தியா கடந்த மார்ச் மாத இறுதியில் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்தது. இதனால், அதிகளவிலான மாணவர்களும், தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காக மே 7 முதல் மே 13 வரை குறைந்தது 64 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான 64 விமானங்களில், ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 11 விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது குறித்து வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது;

* கொரோன அறிகுறிகள் எதுவும் இல்லாத  நபர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* இந்தியாவுக்கு வந்த பிறகு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும், பின்னர் அவர்கள் ஒரு மருத்துவமனையிலோ அல்லது ஒரு நிறுவன வசதியிலோ அவர்களின் சொந்த செலவில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

* விமானத்தை இயக்குவதற்கு முன்னர் பயணிகள் அனைவர்க்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும், மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* பயணத்தின் போது, அனைத்து பயணிகளும் சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய சமூக தொலைநிலை மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் ஆரோக்கிய சேது செயலியை கண்டிப்பாக செயற்படுத்த வேண்டும்.

Related Stories: