ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனாவுக்கு இந்திய தொழிலதிபர் பலி

அபுதாபி:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிகே கரீம் ஹாஜி. இவர் அபுதாபியில் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் முன்னாள்  தலைவர். மேலும் இவர் இந்திய இஸ்லாமிக் மையம் மற்றும் சன்னி மையத்தில் உறுப்பினராக இருந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 2 வாரங்களுக்கு முன் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 30ம் தேதி கரீம் உயிரிழ்ந்தார். இந்த தகவலை அவரது மகன் முகமது அப்துல் கபூர் உறுதி  செய்துள்ளார். இந்தியர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் அங்குள்ள இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: