குடியால் ஏழைக் குடும்பங்கள் பாதிப்பு: டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மதுவை விற்பனை செய்யும் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது.

மது விற்பனையை நிறுத்திவிட்டு இந்த வருவாய் இழப்பை ஈடு செய்ய முடியும். தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்துவதன் மூலமும், பத்திரப் பதிவு கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்த இழப்பை ஈடு செய்ய முடியும். டாஸ்மாக்கை மூடினால் ஏழைக் குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்படுவது நின்றுவிடும். மேலும், மதுபோதையால் ஏற்படும் விபத்துக்களையும் தடுக்க முடியும். எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: