ஸ்விக்கி செயலி மூலம் ஆவின் பால் விற்பனை

சென்னை: ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் நுகர்வோர் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக சூமேட்டோ, டன்சோ ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதர மாவட்ட ஒன்றியங்களிலும் மேற்கண்ட சேவையை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த சேவை மூலம் தினமும் 7 முதல் 8 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஸ்விக்கியுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர் இல்லங்களுக்கு சூமேட்டோ, டன்சோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் ஸ்விக்கி  மூலமாகவும் நேரடியாக பால் மற்றும் பால் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: