ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

மும்பை : இந்தியாவில் 3வது அல்லது 4வது ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்கு செல்லும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில்  கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தைக் கடந்து  இருக்கும் நிலையில் ஏழை, எளியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜனுடன் இன்று  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார்.

இருவருக்கும் இடையிலான  உரையாடலின் போது, பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் கூறுகையில்;  ‘இந்தியாவில் முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும். முழு முடக்கத்தை நீக்கும் சமயத்தில்  புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மேலும் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கைகளில் நாம் அளந்து படிகளை வைக்க வேண்டும்” என்று கூறினார். ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்காமல் பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வழியை தேட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஊரடங்கை முடிக்க மத்திய அரசு தீர்மானித்தவுடன் முதலில் மக்களின் உயிரை கைப்பற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மக்களையும் பொருளாதாரத்தையும் காக்க மரபுகளையும் விதிகளையும் மீறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: