காப்பீட்டு நிறுவனங்களுக்கு 32 சதவீதம் வருவாய் இழப்பு

புதுடெல்லி: கொரோனாவால் காப்பீட்டு துறை நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு இறுதி மாதமான மார்ச் மாதத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வருவாய் அதிகமாகவே இருக்கும். வரி சேமிப்புக்காக புதிதாக காப்பீட்டில் பலர் முதலீடு செய்வார்கள். ஆனால், கடந்த மாதம் இந்த துறையில் 24 நிறுவனங்களுக்கு புதிய பிரீமியங்கள் மூலம் 25,409 கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் சரிவு என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில், காப்பீட்டு துறையில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்துக்கு கடந்த மாதத்தில் பிரீமியம் வருவாய் 31.11 சதவீதம் சரிந்து,17,066 கோடி கிடைத்துள்ளது.  எனினும், ஒட்டுமொத்த அளவில் புதிய பிரீமியங்கள் மூலம் இந்த துறைக்கு 2,58,896 கோடி கிடைத்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 2,14,672 கோடியாக இருந்தது. எல்ஐசிக்கு வருவாய் 1,77,977 கோடி என புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories: