புழல்: நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால் நான் உள்ளே வருவேன் என்று கொரோனா சொல்வது போல் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர். சென்னை புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளி லைன் புதுநகர், பாலாஜி கார்டன், புதுநகர் ரங்கா கார்டன், சாந்தி காலனி, குப்பா மணி தோப்பு, பாப்பாரமேடு மற்றும் பாயசம் பாக்கம் உள்பட பல பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
