சென்னை: தனது கணவருடன் நடிகை சுவாதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘சுப்பிரமணியபுரம்’, ‘வடகறி’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுவாதி ரெட்டி. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமூக வலைத்தளத்தில் தனது போட்டோக்களைப் பகிர்ந்து வந்தார் சுவாதி ரெட்டி. சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் நீக்கிவிட்டார். இதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
