சென்னை: காதலருடன் திருமணம் நடந்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து மணந்தார் அமலா பால். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவரை அமலா பால் காதலித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இருவரும் பஞ்சாபி முறைப்படி திருமணம் செய்யும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்தன. இந்த படங்களை பவிந்தர் சிங் வெளியிட்டு இருந்தார். பின்னர் அவரே நீக்கி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.