ப்ளீஸ்… இங்கிலாந்துக்கு எதிராக வேண்டாம்!

2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் பிரையன் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன் (582 பந்து, 43 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி மகத்தான சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிரிக்கெட் மட்டையை பரிசளித்த இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ‘பிரையன், அடுத்த முறை 400 ரன் அடிக்க முடிவு செய்தால் தயவு செய்து இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் வேண்டாம்’ என்று அதில் எழுதி ஆட்டோகிராப் போட்டிருந்தார்.

Related Stories: