கட்டாய பணிக்கு வர சொல்லி வக்கீல் நோட்டீஸ் மூலம் மிரட்டல்: விராலிமலை சுங்கச்சாவடி தொழிலாளர்கள் தர்ணா

திருச்சி: கட்டாயப்படுத்தி பணிக்கு வரவழைத்ததை கண்டித்து விராலிமலை சுங்கச்சாவடி தொழிலாளர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். மத்திய அரசு உத்தரவுப்படி கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி செயல்பட துவங்கின. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, சேலம், திண்டுக்கல், ஆத்தூர், பர்னூர் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் செயல்பட அந்தந்த கலெக்டர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்த இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படவில்லை. அதேசமயம் புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே பூதக்குடியில் உள்ள சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் சுமார் 60 பேர் 3 ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். கொரோ னா பீதி காரணமாக இவர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலா ளர்களை வைத்து சுங்கச் சாவடி இயங்கியது.

இந்நிலையில், உள்ளூரை சேர்ந்த 60 தொழிலாளர்களுக்கும் சுங்கச்சாவடி சார்பில் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அதில், கட்டாயம் பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதோடு பணி நீக்கமும் செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இன்று காலை முதல் ஷிப்டில் பணிபுரியும் 20 பேர் சுங்கச்சாவடிக்கு வந்தனர். ஆனால் பணி செய்யாமல், அனைவரும் முகக்கவசம் அணிந்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், சுங்கச்சாவடி நிர்வாகம் ஒரு கைக்கு மட்டும் கையுறை தருகிறது. அதை அடுத்த முறை உபயோகப்படுத்த முடியாது. வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவி விட்டால் என்ன செய்வது.

தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரவைக்க கூடாது என்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர். அதை மீறி கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைக்கின் றனர். எனவே கலெக்டர் எங்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு, அனைவரும் பணிக்கு திரும்பினர். கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: