மதுரையில் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பாக 2500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் காவல்துறை உதவி ஆணையர்

மதுரை:  மதுரை மஹபூப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பாக வறுமை நிலையில் உள்ள 2500 குடும்பங்களுக்கு சுமார் 13 லட்சம் மதிப்புள்ள 30 டன் அரிசி, 2,500 கிலோ பருப்பு, மிளகு, சீரகம், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்க பட்டது. மகபூப்பாளையம் ஜமாத் தலைவர் ஹாஜி நிஜாம் அலிகான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார தாசில்தார் கோபிநாதன், மதுரை விமான நிலைய டைரக்டர் செந்தில் வலவன், சுகாதாரதுறை அதிகாரி மற்றும் காவல்துறை உதவி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.

அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து பேசிய ஜமாத் தலைவர் ஹாஜி நிஜாம் அலிகான், பள்ளிவாசலில் நிவாரண பொருட்களை வழங்க கூடாது, கூட்டம் சேர்க்க கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியதால் பலரை அழைக்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். மேலும்  பொருளுதவியாகவும், நிதி உதவியாகவும் வழங்கிய அனைவருக்கும் ஜமாத் தலைவர் நன்றி கூறினார்.

Related Stories: