காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பொருட்கள்

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், 15 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறிகளை, செல்வம் எம்பி, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். காட்டாங்கொளத்தூர் ஒன்றி திமுக சார்பில், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறிகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.ஒன்றிய திமுக செயலாளரும் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி முன்னாள் தலைவருமான எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் கே.பி.ஜார்ஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக எம்பி செல்வம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு எம்எல்ஏவுமான வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 15 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

முதல்கட்டமாக 17வது வார்டில் உள்ள 500 குடும்பங்களுக்கு வழங்கி, பின்னர் தினமும் மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதில், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் பத்மநாபன், அப்துல்காதர், டில்லீஸ்வரி ஹரி, திமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, பொன்தசரதன், சரவணன், எம்.கே.எஸ்.செந்தில், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சி இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: