‘டாம் அண்ட் ஜெர்ரி’ இயக்குனர் மரணம்

சென்னை: டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் இயக்குனர் ஜீன் டெய்ச் (95) காலமானார். சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் ‘டாம் அண்ட் ஜெர்ரி’. இந்த கார்ட்டூன் தொடர், வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களை தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார்.

இவர், இதை தவிர பாப்பாய் எனும் கார்ட்டூன் தொடரின் சில எபிசோடுகளையும் இயக்கி உள்ளார். தனது ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்க வந்துவிட்டார். ஜீன் டெய்ச் ‘மன்றோ’ என்ற கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றுள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், காலமானார்.

Related Stories: