து.தலைவர், கவுன்சிலருக்கு நாற்காலி ஊராட்சி தலைவருக்கு தரை: திண்டுக்கல் அருகே வன்கொடுமை?

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் ஆகியோர், நாற்காலியில் அமர்ந்து பணி புரியும்போது, ஊராட்சி தலைவர் தரையில் அமர்ந்து பணி புரியும் கொடுமை நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியில், தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெர்சி என்ற லட்சுமி. அருந்ததியர் சமூத்தைச் சேர்ந்தவர். இவர் தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே இங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தரையில் அமர்ந்தே தனது பணிகளை பார்த்து வருகிறார்.

துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க, இவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ளார். இவரை யாரும் நாற்காலியில் அமரும்படி கூறுவது கிடையாது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போதைய நவீன காலத்திலும் தீண்டாமை கொடுமையால் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: